என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவிரி கரையோர கிராமங்கள்"
கபிஸ்தலம்:
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த 4 நாட்களாக கொள்ளிட ஆற்றில் அதிகளவில் நீர் திறந்துவிடப்பட்டதையடுத்து கொள்ளிட கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புதுக்குடி, வாழ்க்கை, திருவைகாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வந்த குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இதனை அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி தாழ்வான பகுதிகளில் குடியிருக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு வழங்கினர். தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் கொள்ளிட கரையோர பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் இருக்க பொதுப்பணித்துறை மூலம் மணல் அடுக்கும் பணியை செய்ய அறிவுறுத்தினர்.
அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், திட்ட இயக்குனர் மந்திராசலம், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், ஆணையர்கள் நாராயணன், அறிவானந்தம், பொறியாளர்கள் விஜயகுமார், கருணாநிதி, மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறையும், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ள நீர் அதிகமாக கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் கூறியதாவது:-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்க வேண்டாம். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்